வட கொரியா தூதர் வெளியேற்றப்பட்டார்

 

NorthKoreaenvoyexpelledவட கொரியாவின் தூதர் காங் சோலை மலேசியா வெளியேற்றியது. மலேசியாவுக்கு எதிராக அவர் வெளியிட்டிருந்த அறிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்க விஸ்மா புத்ராவுக்கு இன்று வரும்படி அவர் அழைக்கப்பட்டிருந்தார். மாலை மணி 6 ஆகியும் அவர் வரவில்லை.

இதனைத் தொடர்ந்து விஸ்மா புத்ரா வட கொரியா தூதரகத்திற்கு ஒரு ராஜதந்திர குறிப்பாணையை அனுப்பியது. அந்த ஆணையில் அவர் மலேசியாவை விட்டு வெளியேறுவதற்கு 48 மணி நேரம் இருப்பதாக கூறப்பட்டிருந்தது.

வட கொரியத் தூதர் மலேசிய வெளியுறவுத்துறையின் இரு நாடுகளுக்குரிய விவகாரங்களுக்கு பொறுப்பான துணைத் தலைமைச் செயலாளர் ராஜா நுசிர்வான் சைனால் அபிடினை சந்தித்திருக்க வேண்டும் என்று வெளிவிவகார அமைச்சர் அனிஃபா அமான் இன்றிரவு வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.

ஆனால், தூதரோ தூதரகத்தின் மூத்த அதிகாரிகளோ அமைச்சுக்கு வரும் நிலையில் இல்லை என்று கூறிய அமைச்சர், தூதர் 48 மணி நேரத்திற்குள், அமைச்சுக்கு வரும்படி கூறப்பட்டிருந்த நேரத்திலிருந்து, அதாவது மார்ச் 4, 2017, மாலை மணி 6 லிருந்து, மலேசியாவிலிருந்து வெளியேற வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.