சட்டம் அறிந்த 31 வழக்குரைஞர்களும் கல்விமான்களும் ருக்குநிகாரா பெடரல் அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற ஆலோசனைகளை நிராகரித்தனர்.
மலாய்க்காரர்கள் உரிமைக்காக போராடும் அமைப்பான பெர்காசா ஏற்பாடு செய்திருந்த ஒரு வட்டமேசை விவாதத்தில் பங்கேற்றிருந்த அவர்கள் ருக்குநெகாரா மற்றும் பெடரல் அரசமைப்புச் சட்டம் ஆகியவற்றின் உருவாக்கம் சம்பந்தப்பட்ட வரலாறு வெவ்வேறானவை என்பதை ஒப்புக்கொண்டனர்.
“பெடரல் அரசமைப்புச் சட்டத்திற்கு ருக்குநெகாரா முகப்புரையாக்கப்படுமானால், அது புதிய பொருள் விளக்கங்களை ஏற்படுத்தும். அதனால் மலாய்க்காரர்களின் சிறப்புரிமை சம்பந்தப்பட்ட அரசமைப்புச் சட்டப் பிரிவு 153 மற்றும் இஸ்லாம் பெடரல் சமயம் என்று வகைசெய்யும் சட்டப் பிரிவுகள் 3 மற்றும் 11 ஆகியவற்றுக்கும் பாதிப்பு ஏற்படும்”, என்று வட்டமேசை விவாதத்திற்குப் பின்னர் அவர்கள் ஏற்றுக்கொண்ட தீர்மானம் கூறுகிறது.
ருக்குன் நெகரா ஒரு கோட்பாடாகவே இருப்பதே நல்லது.
அது சட்டமாக்க முனைவோமானால் தனி மனித உரிமையை
அடக்கி விடும்; எடுத்துக்காட்டுக்கு ” இறைவன் மீது நம்பிக்கை
வைத்தல் ” என்ற முதல் கோட்பாடு.