அரசுப் பணியாளர்கள் ஊழல் செய்வது அரசாங்கத் தகவல்களைக் கசிய விடுவது போன்ற விவகாரங்களால் பேரரசர் சுல்தான் ஐந்தாம் முகம்மட் அதிருப்தி அடைந்துள்ளார்.
“முறைகேடுகளும் விரயங்களும் ஊழல்களும் தொடர்ந்து நிலவுவதும் அரசாங்கத்தில் இரகசியமாகக் காக்கப்பட வேண்டிய தகவல்கள் கசிய விடப்படுவதும் அதிருப்தி அளிக்கின்றன”, என்றாரவர்.
மாமன்னர் இன்று காலை இவ்வாண்டுக்கான முதலாவது நாடாளுமன்றக் கூட்டத்தைத் தொடக்கி வைத்து உரையாற்றினார்.
இப்படிப்பட்ட ஊழல்களில் ஈடுபடுவோர் எண்ணிக்கை சிறிது என்றாலும், அது அரசாங்கத்தின்மீது மக்களுக்குள்ள நம்பிக்கையைக் கெடுத்துவிடும் என சுல்தான் முகம்மட் கூறினார்.
தவறு செய்யும் அரசாங்கப் பணியாளர்களைப் பிடித்து நீதிமன்றத்தில் நிறுத்தும் முயற்சிகளையும் அவர் வரவேற்றார்.
தலை சரியாக இல்லாத போது ; வாலை மட்டும் குறை சொல்லி
பயனில்லை.
அரசுப் பணியாளர்கள் என்றால் பிரதமரும் அரசு பணியாளர்தானே
அவனிடம் சொல்வதுதானே– அதற்க்கு எல்லாம் தைரியம் தேவை–