எந்த ஒரு வழக்கிலும் அரசாங்கம் தலையிடுவதில்லை என்கிறார் மலேசியாவின் தலைமை நீதிபதி அரிப்பின் ஜக்கரியா.
“தலையீடு இருந்ததே இல்லை. வழக்குகளை நாங்கள் சுதந்திரமாகத்தான் விசாரிக்கிறோம்”, என அரிப்பின் இன்று பெர்னாமா நேர்காணல் ஒன்றில் கூறினார்.
நீதிமன்றங்கள் கூட்டரசு, மாநில அரசுகளுக்கு எதிராகக்கூட தீர்ப்பளித்ததுண்டு. “அவர்கள் தீர்ப்பை ஏற்கத்தான் வேண்டும்”, என்றாரவர்.
வழக்கில் கொடுக்கப்படும் தீர்ப்பில் திருப்தி இல்லையென்றால் மேல் நீதிமன்றத்துக்குச் செல்லலாம். “இதுதான் நடைமுறை.. ஒவ்வொரு முடிவுக்கும் நாங்கள் (நீதிபதிகள்) காரணம் கூறியாக வேண்டும்”.
இம்மாத இறுதியில் கட்டாய பணி ஓய்வில் செல்லும் அரிப்பின், தீர்ப்பு சொல்லப்படும் முன்பே மக்கள் குறை சொல்லத் தொடங்கி விடுவதை நிதுனைத்தால் “சில வேளைகளில் வருத்தமாக இருக்கிறது”, என்றார்.
தலைமை நீதிபதிக்கு வயது 67. கடந்த ஆண்டு அவருக்கு 6மாத கால பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது”.
நீதிபதிகள் பணி ஓய்வு வயது 66.
அரசு தலையீடு இல்லை! அம்னோ தலையிடு?
நம்பிட்டோம்!
எங்கஅப்பன்குதிருக்கள்ள இல்லவே,இல்லவே
இல்லைங்கோ!
சொந்தப் பேரப்பைள்ளிகளுக்கு ‘அம்புலி மாமா’ கதை சொல்கிறார்.
ஹா ஹா ஹா ஹா ஹா ………………………………..
உண்மையோ உண்மை…..!
பனி ஓய்வு பெறுகிறார் ! ஏதாவது லம்பா கிடைக்கும் என்ற அழுப்ப ஆசைதான் !