பெர்சே: இசி-இன் ‘இலவச விமானப் பயண’ இயக்கம் தேவையற்ற ஒன்று

bersihதேர்தல்   சீரமைப்புக்குப்   போராடும்    இயக்கமான   பெர்சே,   இலவச     விமானப்   பயணச்   சீட்டுக்  குலுக்கல்     நடத்தி      வாக்காளர்   பதிவை   ஊக்குவிக்கும்    தேர்தல்    ஆணையத்தின்  முயற்சியைச்   சாடியுள்ளது.

வயதுக்கு    வந்தவர்களை   இயல்பாகவே   வாக்காளர்களாக்கி     விட்டால்    போதுமே    அதை  விடுத்து       அவர்களைக்   கவர்ந்திழுக்க  இப்படிப்பட்ட    முயற்சிகள்   அவசியம்தானா   என்று   அது   கேள்வி   எழுப்பியது.

தேசிய   பதிவுத்   துறை (என்ஆர்டி)  ஆவணங்களை   அடிப்படையாகக்  கொண்டு  இதை   எளிதாகச்   செய்து   விடலாம்.

“இதைத்தான்   பெர்சே   அது   தொடங்கிய    நாள்முதல்   சொல்லி   வருகிறது.  ஆனால்,   இதன்   தொடர்பில்   பெர்சேயுடன்   கலந்துபேச   இசி   இதுவரை   முன்வரவில்லை”,  என  அந்தத்   தேர்தல்   சீரமைப்பு   இயக்கம்  கூறிற்று.

நாட்டில்  4.1  மக்கள்   பெரும்பாலும்   இளைஞர்கள்   வாக்களிக்கும்   தகுதி    பெற்றிருப்பதாகவும்    ஆனால்,   இன்னும்   அவர்கள்   தங்களை    வாக்காளர்களாக     பதிந்து   கொள்ளவில்லை     என்றும்    இசி   தலைவர்   முகம்மட்  ஹாஷிம்   அப்துல்லா   கூறியுள்ளார்.

தனியார்துறை      உதவியுடன்      ஊக்குவிப்புகளைக்   கொடுத்து   அவர்களை     வாக்காளர்களாக்கும்    முயற்சியில்   இசி   இப்போது    இறங்கியுள்ளது.  அந்த   வகையில்    அதற்கு   உதவ   முன்வந்துள்ள    ஒரு   நிறுவனம்    ஏர்   ஏசியா எக்ஸ்.  அது   புதிய   வாக்காளர்களுக்கு    1,100  பயணச்  சீட்டுகளை   இலவசமாகக்   கொடுக்க   முன்வந்துள்ளது.