வட கொரியரான கிம் ஜொங்-நாம் இறப்புக்குக் காரணம் மாரடைப்பு என்று பிணப் பரிசோதனை அறிக்கை குறிப்பிடவில்லை என்பதைச் சுகாதார அமைச்சர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் இன்று உறுதிப்படுத்தினார்.
கிம் மாரடைப்பால் இறந்தார் என்று வட கொரியா கூறியிருப்பதை மலேசிய தடயவியல் குழு ஏற்கனவே நிராகரித்திருப்பதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
“வட கொரியா யாரை அல்லது எந்த மருத்துவ அறிக்கையை அடிப்படையாக வைத்து அப்படிக் கூறுகிறது என்பது தெரியவில்லை.
“ஆனால், அவர்கள் அவர் மாரடைப்பால் காலமானார் என்றுதான் சொல்லி வருகிறார்கள். இறப்புக்கான காரணத்தைக் கண்டறியும் ஆய்வுகளை மேற்கொள்ளாமலும் அல்லது பிணப் பரிசோதனை அறிக்கையைப் பார்க்காமலும் எப்படி அப்படி ஒரு முடிவுக்கு வந்தார்கள்?”, என்று அமைச்சர் வினவினார்.
mr சுப்ரா அவர்களே ! ஜோங் நாம் மாரடைப்பால் சாகவில்லை என்பது எங்களுக்கும் தெரியும் !! ஆனால் ஒவ்வொரு நாளும் மலேசிய இந்தியர்கள் அரசாங்க வேலை வாய்புகளுக்காக தினம் தினம் சாகிறோம். அரசாங்க உயர் கல்விக்கூடங்களில் நம் மாணவர்களின் எண்ணிக்கை குறைவதை கண்டு தினம் தினம் சாகிறோம். அடையாள ஆவணங்களுக்காக தினம் தினம் சாகிறோம்.ம.இ .கா வின் வெற்று வாக்குறுதிகளால் தினம் தினம் சாகிறோம். போலியான தனியார் கல்விக்கூடங்களில் படித்து ஏமாந்த நம் இன
மாணவர்களை என்னி என்னி சாகிறோம். கடைசியாக எதிர்க்கட்சிகளின் தலைவர்களை நம்பி நம்பி சாகிறோம் . பாவம் நாங்கள் .
அவர் எப்படி இறந்தார் என்பது முக்கியமல்ல. ஆனால், அந்த மரணத்தினால் மலேசியா தேவையில்லாமல் அபாயகரமான பிரச்சனையை எதிர்நோக்கும் என்று அஞ்சுகிறேன்.