நாடாளுமன்றத்தில் இப்போது விவாதிக்கப்படவிருக்கும் பாஸ் கட்சியின் சட்டம் 355 க்கு திருத்தங்கள் செய்வதற்கான தனிநபர் மசோதாவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளிக்கக்கூடாது அல்லது அந்த விவாதத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மிகுந்த ஆவலோடு ஜி25 அமைப்பின் உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முறையீடு செய்துள்ளனர். மேலும், அதற்கான உறுதிமொழியை அளிக்குமாறு ஜி25 நாடாளுமன்ற உறுப்பினர்களை கேட்டுக்கொண்டுள்ளது.
தங்களுடைய கோரிக்கையை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர சிந்தித்துப்பார்ப்பதோடு இஸ்லாமிய சட்டங்களுக்கான எந்த ஒரு திருத்தமும் பெடரல் அரசமைப்புச் சட்டத்தின் எல்லைக்குள் செய்யப்படவேண்டும் என்பதை அவர்கள் கவனத்தில் கொள்ளவார்கள் என்று நம்புவதாக ஜி25 கூறியுள்ளது.
குறிப்பாக, அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 4 மாநில இஸ்லாமியச் சட்டங்கள் மற்றும் ஷரியா நீதிமன்றகள் ஆகியவற்றுக்கு மேலானதாக பெடரல் சட்டத்தையும் சிவில் நீதிமன்றங்களையும் வகைப்படுத்தியுள்ளதை ஜி25 சுட்டிக்காட்டியுள்ளது.
இது அனைத்து மலேசியர்களுக்கும் ஒரே ஒரு நீதி முறை மட்டும் இருப்பதை உறுதிசெய்திறது என்று ஜி25 வலியுறுத்தியுள்ளது.
மலேசியர்களுக்கு துரோகம் செய்வதா ..?.இஸ்லாத்துக்கு துரோகம்
செய்வதா ? நாடாளுமன்ற சிற்பிகள் இன்னும் செதுக்கப்படாத
கருங்கல்லில் காயப்பட்ட கதையாக ஒரு கட்சியின் கடவுளுக்கு
கண்ணில் காயம்பட்ட கலக்கத்தில் நாடாளுகின்றனர்.சீனனனும் இந்தியனும் தெளிவா இருக்காங்கப்பா …பின் கதவு திறக்காமலிருந்தால் சரி. பிம்பங்கள் வெம்புகின்றன !
சமீபத்தில் கிருஸ்துவ சமய போதகர் ஒருவர் கடத்தப்பட்டிருக்கிறார். இந்த அளவுக்கு சமய சுதந்திரம் இருக்கும் போது இன்னும் ஏன் புதிது புதிதாக?
அறிவார்ந்தவர் சொல்வதைக் கேட்கலாம்.