பியோங்யாங்கில் மலேசிய தூதரகப் பணியாளர்கள் ஆவணங்களைத் தீயிட்டுக் கொளுத்தினர்

embassyநேற்று    தொடங்கி,   பியோங்யாங்கில்   உள்ள   மலேசியத்    தூதரகத்தில்    பணியாளர்கள்   ஆவணங்களை   எரிப்பதையும்   அவர்களின்  பயணப்  பெட்டிகளை    வாகனங்களில்   ஏற்றுவதையும்   காண  முடிந்ததாக   சைனா   செண்ட்ரல்   தொலைக்காட்சி (சிசிடிவி)   அறிவித்தது.

இன்று  காலை   தூதரக  வளாகத்தில்    பறந்து   கொண்டிருந்த     மலேசிய,  ஆசியான்   கொடிகள்    இறக்கப்பட்டதாகவும்   சிசிடிவி    செய்தி   கூறிற்று.

மலேசியா     வட   கொரியத்  தூதர்   காங்   சொல்-லை     வேண்டப்படாத  மனிதர்”  என்று  கூறி   நாட்டைவிட்டு   வெளியேற்றியதை   அடுத்து    நேற்று   வட   கொரியா   அங்குள்ள   மலேசிய   தூதர்   முகம்மட்  நிஜாம்   முகம்மட்டை   வெளியேற்றியது.

கிம்  சொல்   நேற்று   பெய்ஜிங்   புறப்பட்டுச்   சென்றார்.

இன்று  காலை   பியோங்யாங்கில்,   வட   கொரியாவில்   உள்ள   மலேசியர்கள்    நாட்டைவிட்டு   வெளியேற   இடைக்காலத்   தடை   விதிக்கப்பட்டிருப்பதாக    அறிவித்தது.

பதிலுக்கு   மலேசியா   வட   கொரிய    தூதரகப்   பணியாளர்கள்   நாட்டைவிட்டு   வெளியேற    தடை   விதித்திருப்பதாக   துணைப்   பிரதமர்   அஹ்மட்  ஜாஹிட்   ஹமிடி   கூறினார்.