மலேசியாவில் சீனாவின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் திட்டங்களில் உள்ளூர் மக்கள் வேலைக்கு அமர்த்தப்பட மாட்டார்கள் என்று கூறப்படுவதை அனைத்துலக வாணிக, தொழில் துணை அமைச்சர் சுவா டீ யோங் மறுத்தார்.
மலேசிய- சீன குவாந்தான் தொழில் பூங்காவில் அலையன்ஸ் ஸ்டீல் (ம) சென்.பெர்ஹாட் தொடங்கியுள்ள எஃகு ஆலையை அவர் சுட்டிக்காட்டினார். அந்நிறுவனம் சீனாவின் Guangxi Beibu Gulf Iron and Steel Investment Co Ltd-இன் துணை நிறுவனம்.
“அத்திட்டம் 3,648 வேலைவாய்ப்புகளை வழங்குகிறது. அதில் மலேசியர்கள் 53 விழுக்காடு வேலைவாய்ப்புகளைப் பெறுவார்கள்”, என்று சுவா இன்று நாடாளுமன்றத்தில் கூறினார்.
53 விழுக்காடு மலேசியர்களில் 50 விழுக்காடு வங்காள தேசிகள். அப்புறம் என்ன மலேசியர்களுக்கு வேலை வாய்ப்பு?