வட கொரிய தூதரக அதிகாரிகள், பணியாளர்கள் மலேசியாவிலிருந்து வெளியேறத் தடை

yrsaynorthKoreaவட   கொரிய   தூதரக  அதிகாரிகளும்    பணியாளர்களும்   மலேசியாவிலிருந்து   வெளியேறத்    தடை  விதிக்கப்பட்டிருப்பதாக   துணைப்  பிரதமர்    அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடி  அறிவித்துள்ளார்.

பியோங்யாங்   வட   கொரியாவில்    உள்ள    மலேசியர்கள்     அந்நாட்டை  விட்டு    வெளியேறத்    தற்காலிகத்   தடை  விதித்ததை    அடுத்து    மலேசியாவும்   பதிலுக்கு    நடவடிக்கை    எடுக்க   வேண்டியதாயிற்று    என்றவர்   விளக்கினார்.

வட  கொரியாவுக்கு   எதிராக    செயல்படும்   நோக்கம்    எதுவும்   மலேசியாவுக்குக்  கிடையாது    என்பதையும்     அவர்   எடுத்துரைத்தார்.

கிம்  ஜொங்-நாம்   கொலை   தொடர்பில்   வட   கொரியா   செய்திகளைத்   திரித்துக்  கூறி   வருவதால்  அரசாங்கம்   இந்நடவடிக்கை   எடுக்க   வேண்டியது   அவசியமாறிற்று    என்றார்.

வட   கொரியாவில்   உள்ள    மலேசியர்களைத்  திரும்ப    அழைத்து  வருவது   குறித்து   வினவியதற்கு   அரசாங்கம்  ஜினிவா  உடன்பாட்டைப்   பின்பற்றி   நடவடிக்கைகளை   மேற்கொள்ளும்   என   ஜாஹிட்   கூறினார்.

பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்  வெள்ளிக்கிழமை    வாராந்திர   அமைச்சரவைக்  கூட்டத்தில்   அது   பற்றிப்   பேசுவார்  என்றார்.

ஜாஹிட்,  மலேசிய   தேசிய   கால்பந்துக்   குழு,  ஆசிய   கோப்பை   தகுதிசுற்று   ஆட்டத்தில்   பியோங்யாங்குக்கு    எதிராக  விளையாடப்போவதில்லை    என்பதையும்   தெரிவித்தார்.  அவ்வாட்டம்   மார்ச்   28-இல்   நடைபெறுவதாக   இருந்தது.