பாதிரியார் ரேய்மண்ட் கோ கடத்தப்பட்ட விவகாரம் அரசாங்கத்தின் கவனத்தில் இருக்கவே செய்கிறது. இதைத் தெரிவித்த மசீச துணைத் தலைவர் வீ கா சியோங், அவரின் குடும்பத்தாரைச் சந்திக்க அரசாங்கம் ஓர் அமைச்சரை அனுப்பியது என்றார்.
“அமைச்சரவை அவர் காணாமல்போனது குறித்து விவாதித்ததுடன் பிரதமர்துறை அமைச்சர் ஜோசப் குருப் பாதிரியாரின் குடும்பத்தாரைச் சந்திப்பதற்கும் ஏற்பாடு செய்தது.
“இவ்விவகாரத்தை முழுமையாகவும் உடனடியாகவும் விசாரித்து பாதிரியாரின் இருக்குமிடத்தைக் கண்டுபிடிக்குமாறு போலீசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது”, என்றும் அவர் ஓர் அறிக்கையில் கூறினார்.