நஜிப்: 2020 தூரநோக்கு தோல்வி அடையவில்லை…ஆனால்

 

vision2020notfailedதூரநோக்கு 2020 தோல்வி அடையவில்லை என்று பிரதமர் நஜிப் நாடாளுமன்றத்தில் கூறினார்.

“நாம் தோல்வி அடையவில்லை என்பது உண்மை, ஆனால் அதில் பலவீனங்கள் பல இருக்கின்றன என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்”, என்று அவர் நாடாளுமன்றத்தில் கூறினார்.

தூரநோக்கு 2020ஐ உருவாக்கியவர் முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட். அவர் இப்போது நஜிப்பை குறைகூறுவதில் முன்னணியில் இருக்கிறார்.

தூரநோக்கு 2020 மலேசியாவை மேம்பாடைந்த நாடாக்கத் தவறி விட்டது. அது கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைக்களுக்கான வருமான இடைவெளியைத் தீர்க்கவும் பூமிபுத்தாரக்கள் 30 விழுக்காடு சொத்துரிமையைப் பெறும் இலக்கை அடையவும் தவறி விட்டது என்று சித்தி ஸைலா முகம்ட் யூசிப் (பாஸ் – ரந்தாவ் பாஞ்சாங்) நாடாளுமன்றத்தில் கூறியிருந்ததற்கு எதிர்வினையாற்றிய நஜிப் இவ்வாறு கூறினார்.

நாட்டில் எல்லாவற்றையும் அரசியலாக்குவது குறைவாக இருக்குமானால் அந்த இலக்குகளை அடையவது சுலபமாக இருக்கும் என்று நஜிப் மேலும் கூறினார்.