வட கொரியாவுடனான ராஜதந்திர நெருக்கடியைப் பயன்படுத்தி அரசியல் இலாபம் தேடாதீர், முகைதின் யாசின்

 

Muhyddinpoliticalmileageஅரசியல் இலாபத்திற்காக மலேசியா மற்றும் வட கொரியாவுக்கு இடையிலான சச்சரவைப் பயன்படுத்தக்கூடாது என்று பெர்சத்துவின் தலைவர் முகைதின் யாசின் கூறுகிறார்.

தங்களுடைய சொந்த அரசியல் திட்டங்களுக்காக இந்த ராஜதந்திர சச்சரவை அனைத்து அரசியல் கட்சிகளும் பயன்படுத்தமாட்டார்கள் என்று தாம் நம்புவதாக முகைதின் இன்று பெட்டாலிங் ஜெயாவில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

வட கொரியாவை விட்டு வெளியேறாமல் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 11 மலேசியர்களின் விவகாரத்தைக் கையாளுவதில் அரசாங்கம் கூடுதலான எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்றாரவர்

“இச்சமயத்தில், 11 மலேசியர்களின் பாதுகாப்புதான் மிக மிக முக்கியமானது என்பதை வலியுறுத்திய முகைதின், வட கொரியர்களுடன் இந்த விவகாரத்தைக் கையாளுவதில் மிகுந்த கட்டுப்பாட்டுடனும் விவேகமாகவும் அரசாங்கம் நடந்துகொள்ள வேண்டும் என்றார்.

இரு தரப்பினரும் சினத்தை மூட்டும் அறிக்கைகள் விடுவதற்கு எதிராக எச்சரிக்கை விடுத்த அவர், இந்த ராஜதந்திர சச்சரவு வட்டார நெருக்கடிக்கு இட்டுச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றார்.