வட கொரிய அதிபர் கிம் ஜொங் நாம் கொலை விவகாரம் சட்டென்று முடிவுக்கு வரப் போவதில்லை அதற்கு “நாம் எதிர்பார்ப்பதைவிட நீண்ட காலமாகும்” என மலேசியா எச்சரித்துள்ளாது. விசாரணை முடிந்த பிறகுதான் அனைத்துலக நடவடிக்கை பற்றி ஆலோசிக்க முடியும் என்று பியோங்யாங்கின் நட்புநாடான சீனா கூறியிருப்பதுதான் இதற்குக் காரணமாகும்.
“சிக்கல்மிக்க எளிதல் உணர்ச்சிவசப்பட வைக்கும் தன்மை கொண்ட வழக்கு என்பதால் அதன் மீதான புலன்விசாரணை முடிய நாம் எதிர்பார்த்ததை விட நீண்ட காலமாகலாம்”, என இராசன ஆயுதங்களின் ஒழிப்புக்கான நிறுவனத்தில்(ஓபிசிடபள்யு) மலேசியாவின் நிரந்தரப் பேராளராக உள்ள அஹமட் நஸ்ரி யூசுப் கூறினார்.
“மலேசியா குற்றவாளிகளை நீதி முன் நிறுத்த ஓபிசிடபள்யு-க்கும் மற்ற அனைத்துல அமைப்புகளுக்கும் முழு ஒத்துழைப்பு வழங்கும்” என அவர் ஓபிசிடபள்யு வலைத்தளத்தில் கூறியிருந்தார்.