ரிம12,000 வருமானம் பெறுவோர்கூட பிரிம் தொகைக்கு விண்ணப்பம் செய்தனர்

brimஇவ்வாண்டு பந்துவான் ரக்யாட் 1மலேசியா(பிரிம்) உதவிக்கு விண்ணப்பம் செய்திருந்த 600,000 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. ஏனென்றால் அவர்கள் வருமானம் ரிம4,000-த்துக்கும் அதிகமாகும்.

மாதம் ரிம8,000-இலிருந்து ரிம12,000 வரை வருமானம் பெறுவோர்கூட உதவி கேட்டு மனுச் செய்திருந்தார்கள் என நிதி அமைச்சர் II ஜொஹாரி அப்துல் கனி இன்று தெரிவித்தார்.

“ரிம4,000-த்துக்கும் அதிகமாக வருமானம் பெறுவோர் என்பதால் 600,000 பேரின் விண்ணப்பங்களை நிராகரிக்க வேண்டியதாயிற்று”, என்றாரவர்.

“அதனால் கூடுதல் விவரங்கள் தேவை என்று கூறுகிறோம். பிரிமுக்காக ஒதுக்கப்பட்ட ரிம700 மில்லியனைத் தகுதி பெறாதவர்களுக்குக் கொடுக்க நாங்கள் விரும்பவில்லை”.

4,000 ரிங்கிட்டுக்கும் குறைவான வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு மட்டுமே பிரிம் உதவித் தொகை வழங்கப்படுகிறது.