குவான் எங்: இப்போது ஒன்றுபட்டிருப்பது முக்கியம், அரசாங்கம் செய்தது சரியா, தப்பா என்ற ஆராய்ச்சி பிறகு

Guanengwatercrisisவட கொரிய “பிணை” நெருக்கடியைக் கையாள்வதில் அனைத்துத் தரப்பினரும் ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டும் என பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் கேட்டுக்கொண்டார்.

பியோங்யாங்கில் பாரிதவிக்கும் 11 மலேசியர்களும் “விரைவில் நாடு திரும்புவார்கள்” என்று எதிர்பார்ப்பதாக லிம் குறிப்பிட்டார்.

“இப்போது நாம் அனைவரும் ஒன்றுபட்டிருக்க வேண்டும். அவர்கள் திரும்பிய பின்னர் (நெருக்கடியை அரசாங்கம் கையாண்ட விதம் சரியா தவறா என்று) சர்ச்சையிடலாம்”, என லிம் செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார்.

இவ்வாரத் தொடக்கத்தில் பியோங்யாங் வட கொரியாவில் உள்ள மலேசியர்கள் அந்நாட்டை வெளியேறத் தடை விதித்தது. பதிலுக்கு மலேசியாவும் இங்குள்ள கொரியர்கள் நாட்டிலிருந்து வெளியேறத் தடை விதித்தது.