வட கொரியாவின் பயணத் தடையைத் தொடர்ந்து அங்கு சிக்கிக்கொண்ட 11 மலேசியர்களில் ஐநா பணியாளர்களான இருவர், அந்நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி கூறுகிறது.
அவ்விருவரும் ஐநாவின் உலக உணவுத் திட்டப் பணியாளர்கள்.
செவ்வாய்க்கிழமை வட கொரியா மலேசியர்களுக்குத் தடை விதிப்பை அறிவித்ததை அடுத்து பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் வட கொரியர்கள் மலேசியாவிலிருந்து வெளியேறத் தடை விதித்தார்.
வட கொரியா பயணத் தடை விதித்ததையும் நஜிப் கடுமையாகக் கண்டித்தார். அது மலேசியர்களைப் பணயக் கைதிகளாக்கும் செயலாகும் என்றாரவர்.