அமனா: எக்ஸ்கோவை பிடித்தது சரி, ‘காட்பாதரை’ யும் விட்டுவிடக் கூடாது

amanahஊழல்   புரிந்ததற்காக   ஜோகூர்   ஆட்சிக்குழு   உறுப்பினர்  அப்துல் லத்திப்   பாண்டியைக்   கைது   செய்த    அதிகாரிகளைப்   பாராட்டிய   பார்டி   அமனா  நெகரா(அமனா),   அடுத்து  அவரின்   ‘காட்பாதரையும்’   விட்டுவிடக்கூடாது,    அவருக்கும்   அவ்விவகாரத்தில்   தொடர்பு   இருக்கலாம்  என்று   கூறியது.

குறிப்பாக,  ஜோகூர்   மந்திரி   புசார்    காலிட்  நோர்டின்   ஆட்சியில்தான்   அது    நடந்துள்ளது     என்பதால்   அவரும்தான்    அதற்குப்   பொறுப்பேற்க   வேண்டும்    என  அமனா   துணைத்    தலைவர்    சலாஹுடின்   ஆயுப்     கூறினார்.

ஒரு   எக்ஸ்கோவைக்   கைது    செய்து     நீதிமுன்   நிறுத்திய     மலேசிய   ஊழல்தடுப்பு    ஆணைய(எம்ஏசிசி)த்தை  ஜோகூர்,      மக்கள்   பாராட்ட   வேண்டும்,  பாராட்டுகிறார்கள்    என்றாரவர்.

ஆனால்,  அதே  மக்கள்,   காட்பாதரின்   ஆசியும்   அனுமதியுமின்றி      ஆட்சிமன்ற   உறுப்பினர்    ஒருவருக்கு    நில  விவகாரத்தில்    மோசடி    செய்யும்    துணிச்சல்   வந்திருக்குமா   என்றும்   வினவுகின்றனர்.

“ஜோகூர்    ஆட்சி  மன்றத்தில்   இயற்கைவளம்,  நிர்வாகம்,   நிதி,    திட்டமிடல்    ஆகிய    விவகாரங்களுக்குப்   பொறுப்பானவர்   மந்திரி   புசார்    என்பதால்    இந்த   நில   ஊழல்   விவகாரத்துக்கு    காலிட்   நிர்வாகம்தான்  முழுப்   பொறுப்பு”,  என  சலாஹுடின்    தெரிவித்தார்.