பிரதமர்: வட கொரிய நெருக்கடியை எதிர்நோக்குவதில் மலேசியர்கள் ஒன்றுபட்டிருக்க வேண்டும்

najibஎதிரணி   உள்பட    எல்லாத்    தரப்பினரும்   வட  கொரிய    நெருக்கடிக்குத்   தீர்வு   காணும்    அரசாங்கத்தின்    முயற்சிகளுக்கு   ஒன்றுபட்ட   ஆதரவை     வழங்க    வேண்டும்   என்று    பிரதமர்    நஜிப்    அப்துல்    ரசாக்    கேட்டுக்கொண்டிருக்கிறார்.

வெளி  அச்சுருத்தலை    எதிர்நோக்கும்போது   மக்கள்   வெளிப்படுத்தும்   ஒற்றுமையை   வைத்துத்தான்     ஒரு    நாட்டின்    வலிமை    கணிக்கப்படுகிறது.

“பிரச்னைகளை  அல்லது   மருட்டலை    ஒன்றுபட்டு    எதிர்கொள்ள   முனைவோமானால்       நாம்   உருவாக்கி   வைத்துள்ளதை   எதிரிகளால்    அழிக்க   முடியாது”,  என   நஜிப்   ஆற்றிய   உரை   அவரது   வலைப்பதிவில்    வெளியிடப்பட்டிருந்தது.

இப்போது    அரசாங்கம்,       வட  கொரியாவிலிருந்து   வெளியேறத்    தடை   விதிக்கப்பட்டுள்ள    மலேசியர்களைப்   பத்திரமாக    திரும்ப    அழைத்து   வரும்  வழிவகைகளை   அராய்ந்து   வருவதாக    பிரதமர்  குறிப்பிட்டார்.

“இச்சிக்கலுக்குத்   தீர்வு    காண   மேற்கொள்ளப்படும்   முயற்சிகளுக்கு   ஆதரவளிப்பதில்   அரசாங்கம்,   எதிரணியினர்   உள்பட,   அனைத்து     மலேசியரும்   ஒன்றுபட    வேண்டும்”,  என்றாரவர்.