1965 ஷியாரியா நீதிமன்ற (குற்றவியல் நீதி) ச் சட்டத்துக்குத் திருத்தங்கள் கொண்டுவரப்படுவதை பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா(பெர்சத்து) ஏற்பதாக பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான் கூறினார்.
இரு கட்சிகளும் அண்மையில் அவ்விவகாரம் குறித்து விவாதித்ததாகவும் பெர்சத்து தலைவர் முகைதின் யாசின் அதற்கு இணக்கம் தெரிவித்தார் என்றும் துவான் இப்ராகிம் தெரிவித்தார்.
“அது குறித்து விவாதித்தோம். (முகைதின்) கொள்கையளவில் ஒப்புக்கொண்டார். அவருக்கு அதில் பிரச்னை ஏதுமில்லை.
“அவர்களுக்கு நாடாளுமன்றத்தில் ஒரு பிரதிநிதி மட்டுமே உள்ளார்- முகைதின்”, என துவான் இப்ராகிம் நேற்றிரவு பாஸ் நிதித்திரட்டும் விருந்து ஒன்றில் கூறினார்.