வட கொரிய விவகாரத்தில் ஏஜி வாய் திறப்பதில்லை; பிரதமரின் உத்தரவாம்

agசட்டத்துறைத்   தலைவர்    முகம்மட் அபாண்டி  அலி,   வட   கொரிய   விவகாரம்   குறித்து    கருத்துத்    தெரிவிப்பதே   இல்லை.  கேட்டால்   பிரதமர்   நஜிப்    அப்துல்   ரசாக்கின்    உத்தரவு     என்கிறார்.

முதன்முதலில்     அவரிடம்   கருத்துக்    கேட்டதற்குப்  “பலரும்  பேசத்   தொடங்கினால்   பேச்சுகளுக்குப்   பாதகமாய்   அமையக்   கூடும்”,  என்று    கூறினார்.

மேலும்  துருவித்  துருவிக்   கேட்டதற்கு,  பிரதமரின்   உத்தரவு   அப்படி   என்றார்.

“அவரும்   துணைப்  பிரதமரும்   மட்டும்தான்   அது   குறித்து    செய்தியாளர்களிடம்   கருத்துரைக்க   முடியும்”,   என்றவர்   சொன்னார்.