பாதிரியார் ரேய்மண்ட் கோவின் குடும்பத்தார், கடத்தல் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதை அடுத்து “உண்மையான கடத்தல்காரர்களை”க் கண்டுபிடிக்கும் முயற்சியில் கவனம் சிதறி விடக்கூடாது, தகவலறிந்தவர்கள் தகவலைப் பகிர்ந்து கொள்ளாமலும் இருந்திடக் கூடாது என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
ரேய்ம்ண்ட் கோ கடத்தப்பட்டு ஒரு மாதம் ஆகும் நிலையில் இன்று ஓர் அறிக்கை விடுத்திருக்கும் அவரின் துணைவியார் சூசன்னா லியு, பாதிரியார் எங்கு உள்ளார் என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது என்றார்.
“மார்ச் 9-இல் சந்தேகத்தின்பேரில் போலீசார் ஒருவனைக் கைது செய்தார்கள். அதில் போலீசார் எங்கள் குடும்பத்தையும் குறிப்பிட்டிருப்பதால் அதன் தொடர்பில் எங்கள் தரப்பில் சில உண்மைகளைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
“என் மகன் ஜோனதனின் கைப்பேசிக்கு சில மின்னஞ்சல்கள் வந்திருந்தன. அவை சந்தேகத்துக்குரியதாக இருந்ததுடன் மிரட்டிப் பணம் பறிக்கும் தோரணையிலும் இருந்ததால் போலீசுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து செயல்பட்டு ஒருவனைக் கைது செய்தார்கள்.
“போலீசார் விரைந்து செயல்பட்டதில் மகிழ்ச்சியே. ஆனால், ஒருவன் கைது செய்யப்பட்டதை வைத்து உண்மையான கடத்தல்காரர்களைப் பிடிப்பதில் கவனம் குறைந்து விடக்கூடாது, கடத்தல் குறித்து உண்மைமையிலேயே தகவலறிந்தவகள் எங்களைத் தொடர்பு கொள்ளாமல் இருந்து விடவும் கூடாது”, என்றவர் சொன்னார்.
32வயது ஆடவன் கோ-வின் குடும்பத்தைத் தொடர்புகொண்டு பணம் கேட்டதை அடுத்து அவன் கைது செய்யப்பட்டான் என சிலாங்கூர் போலீஸ் தலைவர் அப்துல் சமா மாட் கூறினார்.
அவ்வாடவன் கோவின் குடும்பத்தாரிடம் ரிம30,000 கேட்டிருக்கிறான்.