315 வட கொரியர்கள் மலேசியாவில் வசிக்கிறார்கள்: துணைப் பிரதமர் தகவல்

dpmதுணைப்   பிரதமர்   அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடி,  2014- இலிருந்து  315   வட   கொரியர்கள்   மலேசியாவில்   வசித்து   வருவதாகக்   கூறினார்.

அவர்களில்   ஒரு   பகுதியினர்  மலேசிய   சுற்றுலா  அமைச்சின்   மலேசியா   என்னுடைய  இரண்டாவது   இல்லம்(எம்எம்2எச்)   திட்டத்தின்கீழ்   இங்கு    வசித்து   வருகிறார்கள்.

மற்றவர்கள்    மாணவர்களும்   மலேசியாவில்   பணி    புரிவோரும்   ஆவர்     என  ஜாஹிட்    தெரிவித்தார்.

குடிநுழைவுத்   துறை    புள்ளிவிவரங்களை    மேற்கோள்காட்டிய    ஜாஹிட்,    2014-இலிருந்து   இவ்வாண்டு   வரை    2,453   வட   கொரியர்கள்    மலேசியாவில்   இருந்துள்ளனர்    என்றார்.

“2453  வட  கொரியரில்  801 பேர்   தற்காலிக   வேலை   அனுமதி    பெற்றவர்கள்.  193  பேர்  எம்எம்2எச்  திட்டத்தின்கீழ்    இங்கிருப்பவர்கள்.  11 பேர்   மாணவர்கள்,  180  பேர்  சரவாக்கில்   சுரங்கப்    பணியாளர்கள்.

“எங்களின்  ஆவணங்களின்படி   இப்போது   315   பேர்   மட்டுமே    மலேசியாவில்    தங்கி   உள்ளனர்.  மற்றவர்கள்   திரும்பிச்    சென்று   விட்டனர்”,  என  ஜாஹிட்   நேற்று    சாபா,   தாவாவில்   கூறியதாக    தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த   315  பேரின்   நடமாட்டத்தைக்   கண்காணிக்கும்   நடவடிக்கை     எதுவும்   மேற்கொள்ளப்படாது   என்றவர்   உத்தரவாதம்   அளித்தார்.