சுகாதார அமைச்சர் டாக்டர் எஸ்.சுப்பிரமணியம், கொல்லப்பட்ட கிம் ஜொங்-நாமின் உடல் அடையாளம் காணப்பட்டிருப்பதாகக் கூறினார்.
“அவரின் உடலை அவரின் மனைவியும் பிள்ளைகளும் அடையாளம் காண்பித்தார்கள் என எனக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இவ்விவகாரம் இன்னும் இரண்டு மூன்று வாரங்களில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம்”, என்றவர் இன்று புத்ரா ஜெயாவில் செய்தியாளர்களிடம் கூறினார்.
கோலாலும்பூர் மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ள ஜொங்-நாம் யாரிடம் ஒப்படைக்கப்படும் என்று செய்தியாளர்கள் வினவியதற்கு சுப்ரமணியம் அவ்வாறு மறுமொழி கூறினார்.
























