டிஎபி: சட்டம் 355 பற்றிய பெர்சத்துவின் நிலைப்பாட்டை முகைதின் சொல்ல வேண்டும், பாஸ் அல்ல

 

dapanthonylokeஷரியா நீதிமன்றங்கள் சட்டம் 355 க்கான சட்டத் திருத்தங்களை பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து) தலைவர் முகைதின் யாசின் ஆதரிக்கிறார் என்று பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான் கூறிக்கொண்டுள்ளார். அது குறித்து கருத்து தெரிவிக்காமல் டிஎபி தலைவர்களில் பலர் மௌனம் சாதித்தனர்.

துவான் இப்ராகிம் கூறியிருப்பது டிஎபி-பெர்சத்து உறவுகளைப் பாதிக்குமா என்று மலேசியாகினி அவர்களை தொடர்பு கொண்டு கேட்டதற்கு அவர்கள் பதிலளிக்க விரும்பவில்லை.

இன்று பின்னேரத்தில் நாடாளுமன்ற வளாகத்தில் டிஎபியின் அந்தோனி லோக்கிடம் கேட்ட போது, இந்த சர்ச்சைக்குரிய பிரச்சனைக்கு முகைதின்தான் பதில் கூற வேண்டும் என்றார்.

“பெர்சத்துவின் நிலைப்பாடு என்ன என்பதற்கு முகைதின் பதில் கூற வேண்டும், துவான் இப்ராகிம் அல்ல. துவான் இப்ராகிம் அந்த அறிக்கையை பெர்சத்துவின் சார்பில் கூறியிருக்கிறார்”, என்று அந்தோனி லோக் கூறினார்.

வார இறுதியில், மலேசியாகினி முகைதின் யாசின் தரப்புடன் தொடர்பு கொண்டது. பதிலுக்கு இன்னும் காத்திருக்கிறது.

பாஸ் கட்சியுடன் நடந்த ஒரு சந்திப்பில் முகைதின் யாசின் கொள்கையளவில் திருத்தங்களுக்கு ஒப்புதல் அளித்ததாக துவான் இப்ராகிம் கூறியுள்ளார்.

பெர்சத்து சட்டம் 355 க்கான திருத்தங்களுக்கு ஆதரவு அளிப்பதால் பக்கத்தான் ஹரப்பானில் பிரச்சனை ஏதும் எழும் என்று தாம் நினைக்கவில்லை என்று பெர்சத்து இளைஞர் பிரிவுத் தலைவர் சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மான் கூறியதாக இன்று முன்னேரத்தில் சினார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.