படியாக்கம் செய்யப்பட்ட வாக்காளர்கள் எனக் கூறியதை நிலை நிறுத்த பாஸ் இளைஞர் பிரிவு போராடுகிறது

வாக்காளர் பட்டியலில் ஆவி வாக்காளர்களும் படியாக்கம் செய்யப்பட்ட வாக்காளர்களும் இருப்பது உண்மை என பாஸ் இளைஞர் பிரிவு இன்று மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

படியாக்கம் செய்யப்பட்ட வாக்காளர்கள் என அந்தப் பிரிவு கூறியதை நிராகரிக்கும் வகையில் பல செய்திகளை உள்ளூர் மலாய் நாளேடு ஒன்று வெளியிட்டதைத் தொடர்ந்து அது அவ்வாறு தெரிவித்தது.

பெர்லிஸில் பல்வேறு இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள இரட்டை அடையாளங்கள் என பாஸ் இளைஞர் பிரிவின் ஜனநாயகச் சீர்திருத்த உறுப்பினர் சேர்ப்புக் குழுத் தலைவர் சுஹாய்சான் காயாட் கூறிக் கொண்ட ஆறு நபர்களை சினார் ஹரியான் என்ற மலாய் நாளேடு கண்டு பிடித்து செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்திக்காக சினா ஹரியானைப் பாராட்டிய சுஹாய்சான், “தேர்தல் ஆணைய வாக்காளர் பட்டியலில் ஆவி வாக்காளர்களும் படியாக்கம் செய்யப்பட்ட வாக்காளர்களும் உண்மையிலேயே இருப்பதாக பாஸ் இளைஞர் பிரிவு உறுதியாக நம்புகிறது,” என்றார்.

கடந்த திங்கட்கிழமை சுஹாய்சான் வெளியிட்ட தகவல்களை மறுக்கும் பல கட்டுரைகளை சினார் ஹரியான் இன்று பிரசுரித்துள்ளது. சுஹாய்சான் கேள்வி எழுப்பிய அனைத்து அறுவருடைய குடும்பங்களையும் அந்த ஏடு கண்டு பிடித்துள்ளது.

ஆறு வெவ்வேறு இடங்களில் இரட்டை அடையாளங்களைக் கொண்ட மூவரைக் கண்டு தாங்கள் கண்டு பிடித்துள்ளதாக இதற்கு முன்னர் சுஹாய்சான் கூறியிருந்தார்.

அஸ்ஹார் பின் அகமட், பெசா பிந்தி மாட், மான்சோர் பின் அகமட் ஆகிய மூவருடைய இரட்டை அடையாளங்களான மூவரைக் கண்டு பிடித்ததாகவும் அவர் சொன்னார்.

தாங்கள் உண்மையான வாக்காளர்கள் என தாங்களாகவே முன்வந்து நிரூபித்துக் கொண்ட அந்த அறுவருக்கும் ஜோகூர் பாஸ் இளைஞர் பிரிவுத் தலைவருமான சுஹாய்சான் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

“சட்டப்பூர்வ வாக்காளர் பட்டியலைச் சோதிக்கும் போது தங்களது பெயர்கள் தேர்வு செய்யப்பட்டது குறித்து அவர்கள் பெருமை கொள்ளலாம் என்றும் அவர் சொன்னார்.

அந்த அறுவர் சம்பந்தப்பட்ட விஷயம் தற்செயலாக நிகழ்ந்திருக்கக் கூடிய சாத்தியம் இருந்தாலும் வாக்காளர் பட்டியலில் தில்லுமுல்லு செய்யப்பட்டுள்ளதற்கான ஆதாரங்களை பாஸ் இளைஞர் பிரிவு கண்டுள்ளதாக அவர் வலியுறுத்தினார்.

அவர், ஒவ்வொரு பதிவிலும் குறிக்கப்பட்டுள்ள அடையாளக் கார்டு எண்களில் சிறிய வேறுபாட்டை மட்டுமே கொண்ட ” இயல்புக்கு மாறான” ஐந்து ஜோடி பெயர்களை அவர் வழங்கினார்.

அந்தப் பட்டியலில்

Jumaayah bin Alus, (511122105834 and 511122105754)
Sainam binti Tukisan (500307105490 and 500307105474)
Katimah binti Kadni (500808015282 and 500808015290)
Nesam Banu binti Mohammad Fahmi (military identity cards T373594 and T375594), and
Lanuddin bin Ngah Mat Nasir (police identity cards RF107781 and RF107881)

“அந்தப் புள்ளி விவரத்தைப் பார்க்கும் போது பல தனிநபர்கள், புதுமையான பெயர்களைக் கொண்ட தனிநபர்களுடன் 83 விழுக்காடு ஒரே மாதிரியான அடையாளக் கார்டுகளைப் பெற்றிருப்பது மிகவும் முடியாத காரியமாகும். ஆகவே தில்லுமுல்லு நிகழ்ந்துள்ளது என்றே தோன்றுகிறது.”

அவறில் சில தற்செயலாக நிகழ்ந்ததாக இருக்கலாம். ஆனால் எல்லாம் தற்செயலாக இருக்க முடியாது,” என்றார் அவர்.