அடுத்தப் பொதுத்தேர்தலில் பாஸ் கட்சியுடன் கூட்டாக வேலை செய்யும் சாத்தியத்தை பிரதமர் நஜிப் நிராகரிக்கவில்லை என்ற போதிலும், அம்னோவுடன் எவ்வித அரசியல் ஒத்துழைப்பும் இல்லை என்று பாஸ் பிடிவாதம் செய்கிறது.
சமயம், மக்கள் மற்றும் நாடு ஆகியவற்றுக்காக பாஸ் கட்சி அம்னோவுடன் ஒத்துழைக்கும். ஆனால் அது அரசாங்கங்களுக்கு இடையில் மட்டுமே. அரசியல் ஒத்துழைப்பு இல்லை என்று பாஸ் உதவித் தலைவர் முகமட் அமர் நிக் அப்துல்லா கூறினார்.
“14 ஆவது பொதுத்தேர்தலில் நாங்கள் அம்னோவுடன் போட்டியிடுவேம்”, என்று பாஸ் மத்தியச் செயல் குழு கூட்டத்திற்குப் பின்னர் அவர் இன்று கோலாலம்பூரில் செய்தியாளர்களிடம் கூறினார்.
பெர்சத்துவுடனான ஒத்துழைப்பு பற்றி குறிப்பிட்ட அவர், பேச்சுவார்த்தை இன்னும் நடந்துகொண்டிருக்கிறது.
இரு தரப்பினரும் ஒருவர் பேசுவதை மற்றொருவர் கேட்டுக்கொண்டிருக்கும் கட்டத்தில் இப்போது இருக்கிறோம். ஒத்துழைப்பா, இல்லையா என்பது பற்றி முடிவு ஏதும் இல்லை என்று கிளந்தான் மாநில துணை மந்திரி புசாருமான முகமட் அமர் நிக் அப்துல்லா மேலிம் கூறினார்.
இவனை எல்லாம் நம்பினால் நாம் தான் மூடர்கள். இந்த நாதாரிகளுக்கு நியாயம் நீதி அல்ல கொள்கை எதுவும் கிடையாது. எந்த சமயத்திலும் காலை வாரி விடுவான்கள்
பின் கதவு திறந்தே இருக்கின்றது!
புதிய நரித்தந்திரம். உங்களை நம்பினால் மக்கள் திண்டாட்டம்.
இவ்வளவு நடந்தும் கெடிலன் கட்சிக்காரனுக்கு இன்னும் அவனுடன் கூட்டு சேரவே விரும்புகிறான். அவர்கள் எல்லாம் கபட வேஷதாரிகள் என்பது பொதுதேர்தலுக்கு பிறகுதான் தெரியப்போவுது.
எத்தனை காலம்தான் ஏமாற்றுவாய்?. தேர்தல் நெருங்கும்போது இப்படி பேசி தேர்தலுக்கு பின் நமீது குதிரை ஏறுவான். இவனோடு சேரும் எவனும் தோல்வியை காண்பர். அது அம்னோவாக இருந்தாலும் சரி மற்ற எந்த கட்சியானாலும் சரி. அம்னோக்காரன் கூட இவனை நம்பவில்லை.சமயத்தினை (மதம்) அரசியலாகக்கூடாது, அரசியலை சமயமாக்கவும் கூடாது.இறைவன் நம்மை ஆசீர்வதித்து வழிநடத்துவாராக.
சமய ஒத்துழைப்பு உண்டு!