அவர் கிம் ஜொங்-நாம் அல்லர்: வட கொரியா திட்டவட்டம்

kimமலேசியாவில்  கொல்லப்பட்டவர்   கொரிய  ஜனநாயக   மக்கள்   குடியரசு(டிபிஆர்கே)  அதிபர்     கிம்  ஜொங்-உன்னின்   ஒன்றுவிட்ட   சகோதரர்   என்று  கூறப்படுவதை      ஐநாவுக்கான    டிபிஆர்கே   நிரந்தரப்  பேராளர்   மறுத்தார்.

கிம்   ஜொங்-நாம்  கொலை   விவகாரத்தை  வைத்து  அமெரிக்காவும்     தென்  கொரியாவும்       டிபிகேஆரின்   மதிப்பைக்  கெடுக்கும்    செயல்களில்   ஈடுபட்டிருப்பதாக      கிம்   இன் -ரியோங்   நேற்று   செய்தியாளர்களிடம்   தெரிவித்தார்.

ஆயினும்,  கொல்லப்பட்டவர்    டிபிகேஆர்   குடிமகன்தான்    என்பதையும்  அவர்  அந்நாட்டின்   அரசதந்திர   கடப்பிதழ்   வைத்திருந்தார்   என்பதையும்   அவர்   ஒப்புக்கொண்டார்.

“அவர்   விஎக்ஸ்  விஷத்தால்   கொல்லப்பட்டதாகவும்   டிபிகேஆர்தான்   அக்கொலையைச்   செய்ததாகவும்    அமெரிக்காவும்   தென்  கொரியாவும்   ஆதாரமின்றிக்  குற்றஞ்சாட்டி   வருகின்றன,” என்று  அவர்    சாடினார்.