‘பொய்யான செய்தி’யைக் கண்டுபிடிக்க உதவும் இணையத்தளம்

benar பொதுமக்கள்  பொய்யான    செய்திகளைக்  கண்டுபிடிக்க    உதவும்    இணையத்தளமொன்றை    அரசாங்கம்    தொடங்கியுள்ளது.

‘sebenarnya.my’  என்னும்   அந்த   இணையத்தளம்   14வது   பொதுத்   தேர்தலைக்  கருத்தில்கொண்டு   தொடங்கப்பட்டதாக   யாரும்   நினைக்க   வேண்டாம்    எனத்    தொடர்பு,  பல்லூடக    அமைச்சர்    சாலே   சைட்   செருவாக்   கூறினார்.

“ஒரு  செய்தி   உண்மையானதா,  பொய்யானதா   என்பதைத்    தெரிந்து  கொள்ளும்   ஓர்   இடம்   அது…….

“பொய்யான   செய்திகள்   நாடெங்கிலும்   விரவிக்  கிடக்கின்றன.   எதிரணியினர்கூட    அவர்களைப்  பற்றித்   தப்பான    செய்திகள்   வந்துள்ளனவா  என்பதை   இந்த   இணையத்தளத்தின்   உதவியுடன்   தெரிந்து   கொள்ளலாம்”,  என்றவர்  கூறினார்.

“இது   அரசாங்கத்துக்குச்  சொந்தமான   ஒரு  இணையத்தளம்   அல்ல.  மக்களுக்குச்  சொந்தமானது.  எல்லாரும்   அதை  முழுமையாக   பயன்படுத்திக்  கொள்ள   வேண்டும்”,  என்றவர்   கேட்டுக்கொண்டார்.