-மு. குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், மார்ச் 14, 2017
சர்ச்சைக்குரிய மத போதகரான ஸக்கீர் நாய்க் தன்னை மலேசிய நீதிமன்றத்தில் அல்லது அனைத்துலக நீதிமன்றத்தில் நிறுத்த இந்தியா முயற்சிக்க வேண்டுமென்று சினார் ஹாரியான் தினசரிக்கு கொடுத்த பேட்டி ஒன்றில் கூறியதாக செய்தி ஒன்று பிரீ மலேசியா டுடே இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
ஒரு நாட்டில் குற்றம் இழைத்தால் அந்த நாட்டில் விசாரிக்கப்பட்டு, குற்றவாளியென நிரூபிக்கப்படால் அங்குதான் தண்டனை வழங்கப்படும் என்பது ஒரு பாமரனுக்கும் தெரிந்த விஷயம். இது ஸக்கீர் நாயக்கிற்கும் தெரியும். இருந்தாலும் அவர் மலேசிய அரசாங்கத்தின் செல்லப்பிள்ளை என்ற தைரியத்தில் இவ்வாறு கூறி இருக்கிறார்.
இந்திய அரசாங்கம் கடந்த நவம்பர் மாதம் ஸக்கீர் நாயக்கின் இஸ்லாமிய அறவாரியத்தை 5 ஆண்டுகளுக்கு தடை செய்துள்ளது. மத உணர்ச்சிகளை தூண்டும் வகையிலும் கண்டனத்துக்குறிய வகையில் பிரச்சாரம் செய்ததாகவும், அவர் மீது இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.
அதே வேளையில், கிரிமினல் குற்றதிற்காகவும் அவரை இந்திய அரசு தேடிவருகிறது. மலேசிய அரசாங்கம் அவருக்கு அடைக்கலம் அளித்து, நிரந்தர தங்கும் உரிமையும் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவரை நாடு முழுக்க பிரச்சாரம் செய்ய மலேசிய அரசு அனுமதியும் அளித்துள்ளது. மார்ச் 1 ஆம் தேதி ஹிண்ட்ராப் தலைவர் வேதமூர்த்தியும் வழங்கறிஞர் சித்தி காசிமும் ஸக்கீர் நாயக்கிற்கு அடைக்கலம் கொடுத்ததற்கு எதிராக மனு ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்படத்தக்கது.
இந்தியாவுடன் நீண்ட கால நட்பைப் பெற்ற நாடு மலேசியா. அதோடு இந்தியா- மலேசிய வர்த்தக, கலாச்சர, சமய உறவுகள் பல நூற்றாண்டு கால சரித்திரம் கொண்டவை. கணிசமான அளவில் இந்திய வம்சாளியினர் இந்த நாட்டில் குடியுரிமை பெற்று வாழ்ந்து வருகிறார்கள். அவர்களில் 80 விழுக்காட்டினர் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள். ஸக்கீர் நாய்க் பல தடவைகளில் இந்து மதத்தினரின் உணர்ச்சிகளை தூண்டும் வகையில் பிரச்சாரம் செய்திருக்கின்றார்.. இப்படிப்பட்ட மனிதரை மலேசியா வரவேற்று அடைக்கலம் கொடுத்திருப்பது, மலேசிய இந்திய நல்லுறவை நிச்சயம் பாதிக்கும். பல நாடுகளில் தடை செய்யப்பட்டிருக்கும் ஒரு தனி மனிதனை மலேசியா கொண்டாடுவது பல்லின மக்கள் வாழும் இந்த நாட்டிற்கு உகந்தது அல்ல. அது மலேசியாவின் பல்லின மக்களுக்கிடையிலான ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் செயலாகும்.
ஒன்று, ஸக்கீர் நாய்க் உடனடியாக இந்தியா சென்று தன்மேல் சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளை மறுத்து நீதி கேட்கவேண்டும்; இல்லையேல், மலேசிய அரசாங்கம் உடனடியாக அவரை நாட்டை விட்டு வெளியேற்றி அதன் நற்பெயரை காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.
திருடனுக்கும் திருடனுக்கும் உள்ள உறவு பற்றி என்ன சொல்வது?
நாட்டின் அவமானச் சின்னம் நமது அரசாங்கம்.
என்றென்றும் எங்கள் மதிப்பிற்கும் மரியாதைக்குறிய நாடாளுமன்ற உறுப்பினர் அவரகளே, இதிலிருந்து ஓருண்மைத் தெரியவில்லையா? நம்மையெல்லாம் எவ்வளவுப் பெரிய இளித்தவாயர்களாக நினைத்துக் கொண்டிருக்கின்றான் அந்த ஸக்கீர் நாய்க். அவனது இந்தக் கோரிக்கைக்கு இங்கொருக் கூட்டம் அவனுக்கு ஆதரவுக் கொடுத்தாலும் வியப்பில்லை; “MALAYSIA BOLIH .”
உங்கள் கருத்தில் நான் மாறுபடுகிறேன். அதனை நீங்கள் இஸ்லாமிய கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். ஆங்கில சட்டத்தை வைத்துக் கொண்டு ஆட்டம் காட்ட வேண்டாம்!