அனுவார்: டிஎபிக்கு பயந்து கொண்டு சட்டம் 355 மீதான அதன் நிலைப்பாட்டை பெர்சத்து சொல்லவில்லை

 

AnnuarBersatuafraidபார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து) சட்டம் 355 மீதான நிலைப்பாடு என்ன என்று இன்னும் கூறவில்லை ஏனென்றால் அது எதிரணியின் ஒப்பந்தத்தை முறிக்க விரும்பவில்லை என்று நம்பப்படுவதாக அம்னோ தகவல் தலைவர் அனுவார் மூசா கூறினார்.

பெர்சத்துவின் தலைவர் முகைதின் யாசின் கட்சியின் நிலைப்பாடு குறித்து எதுவும் கூறாமல் இருப்பது ஏனென்றால் டிஎபி ஆதிக்கம் செலுத்தும் எதிரணி எடுக்கும் முடிவால் அவரது முக்கியத்தும் பாதிக்கப்படலாம். டிஎபி அந்த மசோதாவை பகிரங்கமாக நிராகரித்துள்ளது.

அது எதிரணி உறுப்பினர்களிடம் காணப்படும் இணக்கமாகும். ஆனால், தனிப்பட்ட முறையில் அவர்கள் (மசோதாவை) ஆதரித்த போதிலும், அவர்கள் கூட்டணியிம் முடிவைப் பின்பற்ற வேண்டும் என்றாரவர்.

அதனால்தான் பாஸ் தலைவர்கள் கட்சி மாறியவுடன் அவர்களுடைய தொனியை மாற்றிக் கொண்டுள்ளனர் என்று அனுவார் இன்று செய்தியாளர்களிடம் நாடாளுமன்ற வளாகத்தில் கூறினார்.