மன்னர் சல்மான் வருகை மலேசியா குறித்த பொய்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தது

najibசவூதி   அராபிய   மன்னர்    சல்மான்    அப்துல்   அசிஸ்   அல்-சவூத்    இம்மாதத்    தொடக்கத்தில்     மேற்கொண்ட   வருகை   மலேசியா   தொடர்பில்    கூறப்பட்டுவந்த   பொய்களுக்கு   முடிவு   கட்டியது     எனப்   பிரதமர்    நஜிப்    அப்துல்   ரசாக்   கூறினார்.

நாம்   தோற்றுப்போன    நாடு    என்றார்கள்,  பொருளாதாரம்   நிலையற்றிருப்பதாகக்   கூறினார்கள்.  ஊழியர்  சேமநிதி    நொடித்துப்  போனதென்றும்   அரசாங்கப்   பணியாளர்களுக்குச்   சம்பளம்   கொடுக்க   நம்மிடம்   பணமில்லை    என்றெல்லாம்    கூறினார்கள்.

“மன்னர்  சல்மான்  இங்கு  வந்ததும்   இந்தப்   பொய்யான   குற்றச்சாட்டுகள்    எல்லாமே   அடியோடு   காணாமல்    போய்விட்டன”,  என   நஜிப்   இன்று   நாடாளுமன்றத்தில்   கூறினார்.

ஷம்சுல்   அனுவார்    நசரா(பிஎன் -லெங்கோங்),   மன்னர்   சல்மானின்   வருகையால்   மலேசியாவுக்குக்  கிடைத்த    அங்கீகாரம்    என்னவென்று   வினவியதற்கு   நஜிப்   இவ்வாறு   பதிலளித்தார்.

சவூதி    அரசக்  குடும்பத்திடமிருந்து    பெற்றதாகக்  கூறப்படும்    ரிம2.6  பில்லியன்   குறித்து   எதிரணியினர்   மன்னர்   சல்மான்   வருகையின்போது         கேள்வி   எழுப்பியிருந்தனர் .

ஆனால்,  மன்னர்  சல்மான்    அவ்விவகாரம்   குறித்து    எதுவும்   குறிப்பிடவில்லை.

நஜிப்     ஆதரவாளர்கள்    உடனே     அதைச்    சுட்டிக்காட்டி    நன்கொடை   விசயத்தில்    தவறு    எதுவும்   நிகழவில்லை    என்பதை   அது  காண்பிப்பதாகக்   கூறினர்.   அதே  வேளை,  எதிரணியினர்    ரிம2.6  பில்லியன்  சவூதியிலிருந்து    வரவில்லை    என்பது   மன்னருக்குத்    தெரியும்    அதனால்தான்   அவர்   எதுவும்  குறிப்பிடவில்லை     என்றனர்.