வட கொரியரான கிம் ஜொங்-நாமின் சடலத்தை என்ன செய்வது என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பை அவரின் குடும்பத்தார் மலேசிய அரசாங்கத்திடமே விட்டுவிட்டதாக துணை இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் நூர் ரஷிட் இப்ராகிம் கூறினார்.
“அவர்கள் பொறுப்பை அரசாங்கத்திடமே விட்டுவிட்டதாக அறிகிறேன். இனி, நாங்கள் அதைக் கவனித்துக் கொள்வோம். என்ன முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதை இப்போது தெரிவிக்க இயலாது”, என்று இன்று ஷா ஆலாமில் அவர் கூறினார்.
இறந்தவர் சடலத்தை என்ன செய்யப்போகிறீர்கள் என்று வினவியதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சர் முடிவு செய்வார் என்றார்
அப்புறம் என்ன? இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்துவிட்டுப் போங்கள்! யார் கேக்கப்போறா? நாதியற்றப் பொணம்!
ஹஹஹஹஹ – நேராக சுவர்க்கம் தான். (இப்படி பேசுவது அவ்வளவு நாகரிகம் அல்ல-என்ன செய்வது?)