பேராக் குடியானவர்கள் அரசாங்கத்துக்கு எதிராக தற்காலிக தடை உத்தரவு பெற்றனர்

ambikaஇடத்தைக்  காலி    செய்யும்படி   பேராக்   மந்திரி   புசார்   இன்கொர்பரேடட் (எம்பிஐ)   விடுத்த   உத்தரவை   நிறுத்தி  வைப்பதில்    ஏழு   குடியானவர்கள்   வெற்றி   பெற்றனர்.

அரை  நூற்றாண்டாக   பாடுபட்டு   வந்த  நிலத்திலிருந்து    பேராக்   எம்பிஐ   தங்களை    வெலியேற்றப்  பார்ப்பதாக    குடியானவர்கள்     தெரிவித்தனர்.

இடத்தைக்   காலி   செய்யும்   உத்தரவு   மீது   குடியானவர்கள்   மேல்முறையீடு   செய்திருக்கிறார்கள்.     அது   விசாரிக்கப்படும்வரை    அவர்களை   வெளியேற்றும்   உத்தரவை   நிறுத்திவைக்க    மேல்முறையீட்டு   நீதிமன்றம்   தடை ஆணை   பிறப்பித்திருப்பதாக    அம்பிகா   ஸ்ரீநிவாசன்   கூறினார்.

“ஏப்ரல்    18  (மேல்முறையீட்டு   நீதிமன்ற)    விசாரணை  முடியும்வரை    இடைக்கால   தடை ஆணை  விதிக்கப்பட்டுள்ளது”,  என    புத்ரா  ஜெயா  நீதி  மாளிகையில்    அம்பிகா   மலேசியாகினியிடம்    தெரிவித்தார்.

சுமார்   40  காய்கறி   பயிர்  செய்வோருக்கும்   விலங்கினங்கள்  வளர்க்கும்  குடியானவர்களுக்கும்   அவர்கள்   தொழில்செய்யும்   இடங்களிலிருந்து   வெளியேற   வேண்டும்    என   எம்பிஐ  வெளியேற்ற   உததரவைக்   கொடுத்திருந்தது.   அவர்களில்   எழுவர்   வெளியேற்ற   உத்தரவுக்கு    எதிராக   சட்ட   நடவடிக்கை    எடுத்தனர்.