சுற்றுலா, பண்பாட்டு அமைச்சர் நஸ்ரி அப்துல் அசீஸ், தாம் பாடாங் ரெங்காஸ் பிரதிநிதி என்ற முறையில் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் 1எம்டிபிமீது பரப்பிவரும் பொய்களுக்கு எதிராக வாதாடப் போவதாகக் கூறினார்.
நஸ்ரி மார்ச் 25-இல் கோலா கங்சாரில் மகாதிருக்கு எதிரான விவாதத்தில் அரசாங்கத்தைப் பிரதிநிதிக்கவில்லை என்று இரண்டாவது நிதி அமைச்சர் ஜொஹாரி அப்துல் கனி கூறியிருப்பதற்கு எதிர்வினையாக அவர் இவ்வாறு கூறினார்.
“எனக்கே குழப்பமாக உள்ளது. அரசாங்கமும் என் கட்சியும் நான் பிஎன்னையோ அரசாங்கத்தையோ பிரதிநிதிக்கவில்லை என்கிறார்கள். ஆனால், பிரதிநிதிக்கிறேன் என்கின்றனர் எதிரணியினர்.
“இப்படி வைத்துக் கொள்வோமே, நான் பாடாங் ரெங்காஸ் எம்பி அதனால் பாடாங் ரெங்காசைப் பிரதிநிதிக்கிறேன்”, என்று நஸ்ரி இன்று நாடாளுமன்றத்தில் கூறினார்.
எப்படி இருந்தாலும் தாம் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைத் தற்காத்துத்தான் பேசப் போவதாக அவர் சொன்னார்.
இது நடக்கும் என்று நான் நினைக்கவில்லை!
ஆமாம் மகாதீர் காலத்தில் நீ டெக்சி பெர்மிட் விசயத்தில் அதிக கொள்ளை அடித்தவன் அல்லவா…
விவாதம்தங்குதடையன்றிநடந்தால்நஸ்ரியின்
குசும்புத்தனமான வாய்க்கொழுப்புகு
Drmவைத்தியம் பார்த்துஅறுவைசிகிச்சை
செய்துவிடுவார் நாக்குகுழறிவிடும் நஸ்ரிக்கு!
முதலில் உனக்கு ஓட்டுப் போட்ட அப்பாவி மக்களுக்கும் ஏழைகளுக்கும் விசுவாசமாக இருந்து மக்களின் விலைவாசி பிரச்சினையை உன் தலைவனின் கவனத்துக்கு கொண்டு சென்று அதற்கான தீர்வைத் தேடு. பிறகு உன் விசுவாசத்தை உன் தலைவனுக்குக் காட்டி ஆடாமல் அசையாமல் ‘அதை’ பிடித்துக் கொண்டே இரு.
நஸ்ரி அவர்களே ! கவனமாக வதாடுங்கள் ! உங்கள் வாதம்
சற்று சோடை போனாலும் ” நீங்களே நஜிப்பை குழியில் தள்ளியதாக ” வருங்காலம் உங்களை வசைபாடும்.
இதுதான் சொந்த காசுல சூனியம் வசிக்கிறது ……