பொருளாதாரத்தை வலுப்படுத்த அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளின்மீது மலேசியர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திய பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், கடந்த ஆண்டு அந்நிய நேரடி முதலீடு(எப்டிஐ) உயர்ந்ததே இதற்குத் தக்க சான்று என்றவர் சுட்டிக்காட்டினார்.
“மலேசியப் பொருளாதாரத்தின்மீது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நம்பிக்கைக் கொள்ளும்போது மலேசியர்கள் நம்பிக்கைக் கொள்ளாதிருக்க காரணம் ஏதேனும் உண்டா?”, என்று நஜிப் அவரது வலைப்பதிவில் வினவினார்.
“பொருளாதார வலுவை அளவிட பல வழிமுறைகள் உண்டு. எப்டிஐ அதில் ஒன்று. அது ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் அந்நிய முதலீட்டாளர்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் காண்பிக்கிறது”, என்றார்.
நஜிபு , உம்முடைய “நம்பிக்கை புராணத்தை” கேட்டுக்கேட்டு காது புளித்துவிட்டது . இன்னும் கேட்டுக்கொண்டிருந்தால் உயர்ரத்த அழுத்தம்தான் வரும் .
அட அதைத்தானய்யா நாங்களும் கேட்கிறோம். பொருளாதாரத்தை வலுப்படுத்த அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளின் என்னவென்றுதான் கொஞ்சம் சொல்லுங்க கேட்போம். எங்களுக்குத் தெரிந்த வரை பொருளாதாரத்தை உயர்த்தவும் வலுப்படுத்தவும் எரிபொருள் விலயேற்றம், அத்தியாவசிய உணவுப் பொருள்கள் விலையேற்றம் இவைதான் எங்கள் கண்ணுக்குத் தெரிகின்றன. ஒருவேளை வரும் பொதுத் தேர்தலுக்குப் பின் ஜி.எஸ்.டி மேலும் உயர்த்தப்படலாம் என்று அறிகுறி சொல்கிறீர்களா தலைவா?
இனிமேல் மக்கள் உன்னை நம்பமாடடார்கள்
கரணம் கடந்த தேர்தலில் நீ மக்களை நம்ப வைத்து கழுத்தை அறுத்துthathu போதும்
மக்கள் மறந்திருக்கmaadarkal
இனிமேல் மக்கள் உன்னை நம்பமாடடார்கள்
கரணம் கடந்த தேர்தலில் நீ மக்களை நம்ப வைத்து கழுத்தை அறுத்தது போதும்
மக்கள் மறந்திருக்கமாட்டார்கள்
பிரதமர் மலேசியர்கள் என்று யாரை குறிப்பிடுகிறார் ?
பங்காளதேசிகளையா ? அந்நிய நாட்டு கள்ளக்குடியேறிகளையா ?
இது நாடா ? தே… வீடா ? ஒன்றும் புரியவில்லை
ஹாஹாஹா
நம்பிக்கை நாயகன்– இப்படி அள்ளிவிடுபவன்தான் இன்று கொடி கட்டி பறக்கிறான்.