நஸ்ரி: ‘நான் தயார்படுத்திக்கொள்ள வேண்டிய தேவை இல்லை, அவர்கள் என்ன வேண்டுமானாலும் கேட்களாம்

 

Nazrinopreparationமுன்னாள் பிரதமர் மகாதிர் முகமட்டோடு விவாதம் நடத்தவிருக்கும் சுற்றுலா மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அசிஸ் அந்த விவாதத்திற்கு தாம் எதையும் தயாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார்.

“நான் தயார் செய்வதற்கு ஒன்றுமில்லை. நான் மார்ச் 25 இல் (விவாதத்திற்கான நாள்) அங்கு செல்வேன்.

“நான் தயார் செய்ய வேண்டியதில்லை. அவர்கள் என்ன வேண்டுமானாலும் கேட்களாம். நான் பதில் கூறுவேன். நான் பதில் அளிக்கக்கூடியவற்றுக்கு, நான் பதில் அளிப்பேன்”, என்று மலேசியாகினியின் கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.

இன்னொரு கேள்விக்கு பதிலளித்த நஸ்ரி மகாதிரை எதிர்கொள்வதில் தமக்கு அச்சம் ஏதும் இல்லை என்றார்.

“இல்லை, இல்லை, இல்லை… அவர் ஓர் ஓய்வுபெற்ற மூத்த அரசியல்வாதி. நான் ஒரு மூத்த அரசியல்வாதி, அதுதான் வேறுபாடு… நான் இன்னும் ஒரு மூத்த அரசியல்வாதி, நான் இன்னும் ஓர் அமைச்சர்”, என்று நஸ்ரி மேலும் கூறினார்.

இந்த விவாதம் பேராக் மாநிலத்தில் எம்ஆர்எஸ்எம் கோலக்கங்சாரில் நடைபெறவிருக்கிறது. இதில் விவாதிக்கப்படவிருப்பவை 1எம்டிபி, பிரதமர் நஜிப் ரசாக்கில் கணக்கிலுள்ள ரிம2.6 பில்லியன், கிழக்குக் கரை ரயில்வே திட்டம் மற்றும் மகாதிர் பிரதமராக இருந்த காலத்தில் நடந்த பிஎம்எப் ஊழல் ஆகியவையாகும்.