பிஎன் ஆளும் கட்சி உறுப்புக் கட்சிகள் வேண்டாம் என்று எச்சரித்திருந்தாலும் அரசாங்கம் ஷியாரியா நீதிமன்ற(குற்றவியல் நீதி)ச் சட்டத்தைத் திருத்தம் செய்ய சட்டவரைவைக் கொண்டுவருவதில் உறுதியாக இருப்பதாய்த் துணைப் பிரதமர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறினார்.
“அரசாங்கம் தானே சட்டம் 355(திருத்தத்தை)-ஐ விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும்”, என்றவர் கூறியதாக பெர்னாமா அறிவித்துள்ளது.
அச் சட்டத் திருத்தம் மற்ற சமயங்களுக்கு அச்சுருத்தல் அல்ல என்றும் அவர் சொன்னார்.
கோலா திரெங்கானுவில் அம்னோ கிளைகளிடையே உரையாற்றிய ஜாஹிட், அச்சட்ட வரைவு நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் கொண்டுவரப் படுமா என்பதை குறிப்பிடவில்லை.
இதெல்லாம் ஆட்சியில் இருக்கவே- கொள்கை எல்லாம் தேவை இல்லை. நீதி நியாயம் எல்லாம் தேவை இல்லை. ஆட்சியில் இருந்தால் தானே கம்பி எண்ணாமல் இருக்க முடியும்– எல்லாம் மலேசியாவின் தலை விதி– மலாய்க்காரன்களுக்கு அவன்களின் இனம் ஆட்சியில் இருக்கவே வேண்டும்- என்ன கேடு கெட்டவனாக இருந்தாலும் பரவாயில்லை.
‘இவர்களுக்கு’த் தெரியும் ‘அவர்களால்’ ஒன்னும் புடுங்க முடியாது என்பது. குரைக்கறதுகள் வேட்டைக்கு உதவாது
அம்னோ கிளைகள் அல்லவா! வீரம் தானாகப் பொத்துக்கிட்டு வரும்!
கையிலாகாதவன் கைகட்டித்தான் நிற்பான்… இதுதான் பங்காளி கட்சியினரின் இன்றய நிலை..!!!!
ம இ கா ! உம் , ம .சி .ச ! உம் பாரிசானாய் விட்டு வெளியேறுமா !!
மக்கள் பங்காளித்துவ காட்சிகளை தூக்கி எரியும் நேரம் இதுதான் ! இப்ப இல்லகாட்டி எப்போ ? எப்போ ? எப்போ ?