இன்று மலேசிய வழக்குரைஞர் மன்றம் அதன் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் அதன் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து மதுபானம் வழங்குவதற்கு ஆதரவாக வாக்களித்தது.
அம்மன்றத்தின் நிகழ்ச்சிகளில் மதுபானம் வழங்குவதற்கு எதிராக வழக்குரைஞர் முகமட் அமிர் ஷாரில் பஹாரி முகமட் நூர் முன்மொழிந்த தீர்மானம் மிகப் பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது. தீர்மானத்திற்கு ஆதரவாக 9 வாக்குகளும் எதிராக 588 வாக்களும் அளிக்கப்பட்டன.
இப்பொதுக்கூட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட வழக்குரைஞர் மன்ற உறுப்பினர் சித்தி காசிமுக்கு எதிராக அமிர் பஹாரி கொண்டு வந்த முன்மொழிதல் திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டது.
வழக்குரைஞர்கள் அவ்வளவு பேரும் குடிகாரன்களா? இவன்களை எப்படி நம்புவது?
Good!