பாஸ் தலைவர் அவருடைய கட்சியின் தேர்தல் நோக்கங்களை சமீபத்தில் வெளியிட்டதற்காக பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நாசூதியன் இஸ்மாயில் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
அவர் கூறியதாக வெளியான சில அறிக்கைகளை அப்துல் ஹாடி மறுத்துள்ளார் என்று ஷா அலாமில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த போது கூறிய சைபுடின், இருந்தாலும் தாம் ஹாடிக்கு நன்றி கூறிவதாக அவர் சொன்னார்..
“ஆக, எனக்கு எது எதுவென்று தெரியவில்லை. ஆனால் அவர் சொன்னார் என்பது உண்மையானால், நான் அவருக்கு நன்றி கூறுகிறேன்”, என்றார் சைபுடின்.
இது எதிர்வரும் பொதுத் தேர்தல் பற்றி பாஸின் உண்மையான நோக்கங்கள் என்ன என்பதை அது காட்டுகிறது என்றாரவர்.
ஓன்லைனில் வலம் வரும் ஒரு வீடியோ பதிவு அப்துல் ஹாடி பாஸின் நோக்கம் 40 நாடாளுமன்ற இருக்கைகளை வெல்வதாகும் என்று கூறுவதைக் காட்டுகிறது.
திரங்கானுவில் பதிவு செய்யப்பட்ட அந்தப் பேச்சில் அம்னோவுடனான இணக்கமானப் போக்கு அதில் ஒலிக்கிறது. அம்னோவை கண்டனம் செய்வதை பாஸ் உறுப்பினர்கள் நிறுத்த வேண்டும் என்று ஹாடி கேட்டுக் கொண்டுள்ளார்.
அம்னோ இப்போது ஷரியா சட்டம் 355 ஐ திருத்த விரும்புகிறது. அதைச் செய்வதற்கு அதற்கு பாஸ் தேவைப்படுகிறது. இந்த ஒத்துழைப்பு “அரசியல் முதிர்ச்சியை” காட்டுகிறது” என்பதோடு அரசியலில் இஸ்லாத்தின் ஆதிக்கத்தை உறுதி செய்வதற்கு இது தேவைப்படுகிறது என்று ஹாடி கூறுகிறார்.
“ஆக, திரங்கானு, கிளந்தான், கெடா, பேராக் மற்றும் சிலாங்கூர் ஆகியவை பாஸ் தலைமையில் இருக்கட்டும். மற்ற மாநிலங்களில், அம்னோ அவற்றை விரும்பினால் அப்படியே ஆகட்டும்.
“நம்மால் முடிந்தால், (பாஸுக்கு) எல்லாமே வேண்டும்…ஆனால் நாம் நமது திறமையை கவனத்தில் கொள்ள வேண்டும். இதனால்தான், இஸ்லாம் ஆதிக்கம் அரசியலில் இருப்பதை உறுதிசெய்வதற்கு நமக்கு ஒத்துழைப்பு தேவைப்படுகிறது”, என்று அப்துல் ஹாடி அவாங் கூறுவது வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.