டான் ஜியா இயி குடியுரிமை பெறுவதில் சிக்கலை எதிர்நோக்குகிறான். அந்த 11-வயது சிறுவன் அவனின் பெற்றோர் அவர்களின் திருமணத்தைப் பதிவு செய்த ஒரு நாளைக்கு முன்னதாக பிறந்தவன் என்பதால் அவனுக்குக் குடியுரிமை கொடுக்க தேசிய பதிவுத் துறை(என்ஆர்டி) மறுத்து விட்டது.
டான், மலேசியரான டான் பான் குவானுக்கும் இந்தோனேசிய தாய்க்கும் பிறந்தவன்.
அத்தம்பதிகள் அவர்களின் திருமணத்தைப் பதிவு செய்வதற்குப் பல தடைகள் ஏற்பட்டன. எல்லாவற்றையும் கடந்து தேவையான ஆவணங்களுடன் திருமணப் பதிவுக்குத் தயாரானார்கள். பேராக், ஈப்போ என்ஆர்டி அலுவலகத்தில் 2005 ஜுலை 26-இல் பதிவு செய்யலாம் என்று அவர்களிடம் கூறப்பட்டது.
அன்று பார்த்து பான் குவானின் மனைவிக்குப் பிரவச வலி வந்து விட்டது. அவர்கள் என்ஆர்டி அலுவலகம் சென்றபோது அலுவலகத்தை மூடிவிட்டு அதிகாரி புறப்பட்டுக் கொண்டிருந்தார். மறு நாள் வருமாறு கூறினார்.
அவர்கள் மறுநாள் சென்றனர். ஆனால், பயனில்லை.
ஜியா இயி-இன் பிறப்பைப் பதிவுசெய்ய பான் குவான் இடுவரை மூன்று தடவை முயன்று விட்டார். ஜியா இயி-இன் மூன்று இளவல்களும் மலேசிய குடிமக்கள். அவர்களைப் பதிவு செய்வதில் பிரச்னை இருக்கவில்லை.
இன்னும் சில மாதங்களில் சிறுவனுக்கு 12 வயதாகும். ஜியா இயி-இன் பிறப்பை அவன் தாய் அவருடைய நாட்டிலும் பதிவு செய்யவில்லை. இதனால் அவன் எந்த நாட்டுக் குடிமகன் என்பது பெரும் சிக்கலாக உள்ளது.