பொருளாதாரத்தை அரசியலாக்குவதையும் அதைக் கீழறுப்புச் செய்யும் வேலைகளையும் உடனே நிறுத்த வேண்டும் எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கேட்டுக்கொண்டிருக்கிறார். அதனால் நாட்டுக்குக் கெடுதல்தான் உண்டாகும் என்றார்.
“இது தொடர்வது நல்லதல்ல. அரசியல் கருத்துவேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், தேசிய நலன்களைக் கட்சி அரசியலில் பணயக் காய்களாக வைத்து ஆடக் கூடாது.
“தேசிய நலன் எல்லாவற்றுக்கும் மேலானது.
“பொருளாதாரக் கீழறுப்பு என்று கருதப்படும் செயல்கள் மக்களின் நலன்கருதி நிறுத்திக்கொள்ளப்பட வேண்டும்”, என நஜிப் நாடாளுமன்றத்தில் கூறினார்.
பொருளாதாரத்தை வலுவடையச் செய்ய….கண்ணாடி முன்னாடி நின்று பேசக்கூடாது..
உங்கள் ஆட்சியில் நடக்கின்றபொழுது மற்றவர்களை குறை சொல்வதை நிறுத்துங்கள்.
ரிங்கிட் சொல்லுமே உன்னுடைய பொருளாதார திறமையை. போடா வெங்காயம். பக்கத்து புள்ளி பார்த்தாவது புத்தி வரவில்லை?
ரோஸ்மாவிடம் சொல்லிவிட்டுத் தானே இதனைச் சொல்லுகிறீர்?