மலேசியா “கொள்ளையடிக்கும் கலாச்சார”த்தில் சிக்கிக் கொண்டு தவிப்பதாக அங்கலாய்க்கிறார் டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங். பண அரசியலிலும் ஊழலிலும் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு அமைச்சர் பதவியிலிருந்து அகற்றப்பட்ட ஒருவர் பிறகு பெல்டா தலைவராக நியமிக்கப்பட்டதே இதற்குத் தகுந்த சான்று என்றவர் சுட்டிக்காட்டினார்.
“இன்றும் அவர் பெல்டா குழுமத்தின் முக்கிய தலைவராக இருக்கிறார்”, என்று கிட் சியாங் நேற்று ஓர் அறிக்கையில் கூறினார்.
லிம் எவரின் பெயரையும் கூறவில்லை என்றாலும், அவர் பெல்டா தலைவர் இசா சமட்டைத்தான் குறிப்பிடுகிறார் என்று தெரிகிறது. இசா-வுக்குப் பதிலாக ஜோகூர் பாரு எம்பி ஷாரிர் அப்துல் சமட் பெல்டா தலைவராக இப்போது நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், இசா இன்னும் பெல்டா குளோபல் வெண்ட்சர்ஸ்(எப்ஜிபி) ஹோல்டிங்ஸ் பெர்ஹாட்டின் தலைவராக உள்ளார்.
இதான் எனக்கு இப்போதே தெரியுமே– அம்னோ நாதாரிகள் கொள்ளை அடிப்பது ஆச்சரியமா?