பெங்காலான் செப்பா பாஸ் தொகுதித் தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்த நிக் அப்டு நிக் அப்துல் அசிஸ் தாம் விளையாட்டாகத்தான் போட்டியிட்டதாகக் கூறினார்.
ஒரு காலத்தில் பெங்காலான் செப்பாவுக்குத் தலைவராக இருந்தவர் காலஞ்சென்ற அவரின் தந்தையும் பாஸ் ஆன்மிகத் தலைவருமான நிக் அப்துல் அசிஸ் நிக் மாட் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஸ் இளைஞர் தலைவரான நிக் அப்டுவுக்கு அத்தொகுதி துணைத் தலைவர் போட்டியில் 37 வாக்குகள்தான் கிடைத்தன. ஆனால், நடப்புத் துணைத் தலைவர் இஸானி உசேனுக்கு 209 வாக்குகள் கிடைத்தன.
தேர்தலுக்குப் பின் நிக் அப்டுவை நேர்காணல் கண்ட உத்துசான் மலேசியா, அவரது தோல்வியை பார்டி அமனா நெகரா கொண்டாடுவதுபோல் தெரிவதாகவும் அது குறித்து அவரது கருத்தையும் வினவியது.
“என்னைப் பழிப்பவர்கள் தற்காலிகமாக கொண்டாடட்டும். நான் விளையாட்டாகத்தான் போட்டியிட்டேன். எனக்கு இருக்கும் பதவி(இளைஞர் தலைவர்)யே போதும். அவ்வளவு வேலை”, என்றார்.
நாங்கள்லாம் குப்புற விழுந்தாலும் மீசையிலே மண் ஒட்டாது தெரியுமில்லே……
மீசையில் மண் ஒடடலையாம்
மீசையே இல்லையாம் ……