பெர்சத்து, ஹரப்பான் உறுப்பினராக ஏற்றுக்கொள்ளப்பட்டது

 

Bersatuacceptedபக்கத்தான் ஹரப்பான் தலைமைத்துவ மன்றம் இன்று பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியாவை (பெர்சத்து) எதிரணியின் ஓர் உறுப்பினராக ஏகமனதாக ஏற்றுக்கொண்டது. அத்துடன், அது டாக்டர் மகாதிர் அறிவித்திருந்த நான்கு பரிந்துரைகளை விவாதிக்க ஒப்புக்கொண்டுள்ளது.

பக்கத்தான் ஹரப்பான் அனுவலகம் இந்த முடிவைத் தெரிவிக்க பெர்சத்துவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பும் என்று பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிஸா, அமனா தலைவர் முகம்மட் சாபு மற்றும் டிஎபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் ஆகியோர் இன்று கூட்டாக விடுத்த அறிக்கை கூறுகிறது.

ஹரப்பானை ஆர்ஒஎஸ்சிடம் பதிவு செய்வதற்கு தலைமைத்துவ மன்றம் ஒப்புக்கொண்டதாக அந்த அறிக்கை மேலும் கூறிற்று.

இதற்கு முன்னதாக, பெர்சத்து தலைவரான மகாதிர் ஹரப்பான் அதன் பெயரை மாற்ற வேண்டும் என்று ஆலோசனை கூறியிருந்தார். மேலும், பொதுவான சின்னம் மற்றும் தேர்தல் கொள்கை விளக்க அறிவிப்பு வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தியிருந்தார்.