மார்ச் 25-இல் கோலா கங்க்சாரில் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகம்மட்டுக்கும் சுற்றுலா, கலாச்சார அமைச்சர் நஸ்ரி அசிசுக்குமிடையில் நடைபெறவிருந்த விவாதத்துக்கு போலீஸ் அனுமதி கிடைக்கவில்லை.
“அந்நிகழ்வுக்கான காரணங்களையும் பாதுகாப்பு, பொது ஒழுங்கு, பொதுமக்களின் சுதந்திரம் ஆகியவற்றைப் பரிசீலித்த பின்னர் கோலா கங்சார் மாவட்ட போலீஸ் தலைவர் அஹ்மட் தெர்மிஸி அப்ட் ஹாக் விண்ணப்பத்தை நிராகரிக்க முடிவு செய்தார். அம்முடிவு எழுத்துப் பூர்வமாக இன்று விண்ணப்பதாரருக்குத் தெரிவிக்கப்படும்”, என பேராக் இடைக்கால போலீஸ் தலைவர் ஹஸ்னான் ஹசன் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த டாக்டர் மகாதிருக்கும் நஸ்ரிக்குமிடையிலான அவ்விவாதம் வரும் சனிக்கிழமை பிற்பகல் கோலா கங்சாரில் நடைபெற விருந்தது.

























இப்படி நடக்கும் என்று உலக மக்களுக்கே தெரியுமே.
மஹாதிருடன் மோதுவது மலையுடன் மோதுவதற்கு சமம். நம்பிக்கை நாயகனுக்கு இது நன்றாகவேத்தெரியும். காவற்துறையினரைக்கொண்டு காயை கட்சிதமாக நகர்த்துகின்றார், கைகாரியின் கணவர் ! நான்கு சுவர்களுக்குள் என்ன நேர்ந்துவிடப் போகின்றது ? அப்படியென்றால் காவற்துறையினர் கையில் எதைப் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள் ? இன்னும் மக்களை மந்தைகளாய் நடத்தும் இந்த ஆட்சியை மக்கள்தான் மாற்றவேண்டும்.
ஹாஹாஹா–
மேதாவிகளுக்கு மேதாவிகள் இந்த அம்னோ குண்டர்கள். எல்லாமே நிழல் விளையாட்டுகள்.