தங்களுக்கிடையில் விவாதம் நடைபெற வேண்டுமானால், சுற்றுலா, கலாச்சார அமைச்சர் நஸ்ரி அப்துல் அசிஸ் நாளை பிற்பகலுக்குள் அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என டாக்டர் மகாதிர் முகம்மட் கூறினார்.
வரும் சனிக்கிழமை பிற்பகல் கோலா கங்சார் மக்தாப் ரெண்டா சயின்ஸ் மாரா(எம்ஆர்எஸ்எம்) வில் விவாதம் நடத்த போலீஸ் அனுமது மறுத்ததை அடுத்து அவர் இவ்வாறு கூறினார்.
இன்று பிற்பகல், புத்ரா ஜெயாவில் செய்தியாளர்களிடையே பேசிய மகாதிர், விவாதத்தை பாடாங் ரெங்காசில் வைத்துக்கொள்ளலாம் என்று தாம் முன்மொழிந்ததாகவும் நஸ்ரிதான் எம்ஆர்எஸ்எம்-மைத் தேர்ந்தெடுத்தார் என்றும் மகாதிர் கூறினார்.
“’Nothing to Hide’ கருத்தரங்கம்போல் ஆகி விடாமல் இந்த விவாதம் நடப்பதையே நான் விரும்புகிறேன். அவர்கள் எந்த விவகாரத்தை முன்வைத்தாலும் சரி, பிஎம்எப் ஊழல் உள்பட, நான் விவாதிக்கத் தயார்.
“விவாதத்துக்கு ஏற்பாடு செய்ய நாளை பிற்பகல்வரை நஸ்ரிக்கு அவகாசம் அளிக்கிறேன். இடையில் என்னைச் சந்திக்க விரும்பினால் அதற்கும் ஏற்பாடு செய்து கொள்ளலாம்”, என்றார்.
திருட்டு காக்காவுக்கு திடீர் மறதி வராம இருந்த சரி! எங்க பிள்ளைகள் உயர் படிப்புக்கு உதவி கேட்டால் quota! ஆனா இவன் பிள்ளைகள் திடீர் கோடிஸ்வரர்களானது எப்படின்னு விளக்கி சொல்லட்டும்!!!
கெடுவான் கேடு நினைப்பான்!