ஆவலோடு எதிர்பார்க்கப்படும் நஸ்ரி-மகாதிர் விவாதத்தின் ஏற்பாட்டாளர்கள் விவாதம் நடைபெறவிருக்கும் புதிய இடத்தை நாளைக்குள் தெரிவிக்க வேண்டும் என்ற மகாதிரின் கோரிக்கையை நிறைவேற்றும் நிலையில் இல்லை.
இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுடன் பேசிய நஸ்ரி, விவாதத்தை அதை ஏற்பாடு செய்யும் சினார் ஹரியானின் ஷா அலாம் அலுவலகத்தில் ஏப்ரல் 7 ஆம் தேதியில் நடத்துவதற்கு முன்மொழிந்துள்ளதாக கூறினார்.
இந்த முன்மொழிதல் குறித்து முன்னாள் பிரதமரை தொடர்புகொள்ளவும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவும் சினார் ஹரியான் நடவடிக்களை மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
இன்று முன்னேரத்தில், இந்த நிகழ்ச்சியை திட்டமிட்டபடி சனிக்கிழமை பிற்பகல் மணி 3 க்கு எம்ஆர்எஸ்எம் கோலகங்சாரில் நடத்தப்படுவதிலிருந்து சினார் ஹரியானை போலீசார் பாதுகாப்பு காரணங்களுக்காகத் தடுத்து விட்டனர்.
இதனிடையே, இந்த விவாதத்திற்கு ஷா அலாம் நாடாளுமன்ற உறுப்பினரும் அமனாவின் தகவல் பிரிவு தலைவருமான காலிட் சாமாட்டை நடுவராக இருக்குமாறு தாம் கேட்டுக் கொண்டதாகவும் அதற்கு அவர் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் நஸ்ரி கூறினார்.
மக்களுக்கு பயன் படும் விவாதமாக அமையுமா ?