மலேசியாவில் இனப் பாகுபாடு இன்னும் நிலவுகிறது

ngoஇனப்பாகுபாட்டைக்  காண்பிக்கும்   சம்பவங்கள்   நாட்டில்   தொடர்ந்து   நடைபெற்றுக்கொண்டுதான்   இருக்கின்றன.  என்ஜிஓ-வான   பூசாட்  கோமாஸின்   அறிக்கை   அப்படித்தான்   கூறுகிறது.

தேசிய    ஒற்றுமையை    மேம்படுத்த   1மலேசியா   கோட்பாடு    அறிமுகப்படுத்தப்பட்டது,   தேசிய    ஒற்றுமை    ஆலோசனை    மன்றம்    அமைக்கப்பட்டது    ஆனாலும்,  இனவாதம்தான்   மக்களைப்   பிரித்தாள்வதற்கு    இன்னமும்   கடைப்பிடிக்கப்படுகிறது    என    பூசாட்   கோமாஸின்   2016   மலேசிய   இனப்பாகுபாடு    மீதான     அறிக்கை   கூறியது.

நேற்றிரவு   பெட்டாலிங்  ஜெயாவில்   அந்த   அறிக்கையை  வெளியிட்ட   பூசாட்  கோமாஸ்   திட்ட  ஒருங்கிணைப்பாளர்   ரியான்  ,“இனப்பாகுபாட்டைக்   காண்பிக்கும்   சம்பவங்களும்   இனவாதமும்    இன உறவுகளை   நலிவுறச்  செய்யும்    சம்பவங்களும்    அதிகமதிகமாக    தலைதூக்கக்  காண்கிறோம்.  நாடு   மிதவாதத்தை  ஊக்குவித்து    வருவதாக   பிரதமர்   உத்தரவாதம்   அளித்தும்   இந்நிலை”,  என்றார்.