சுற்றுலா, பண்பாட்டு அமைச்சர் நஸ்ரி அப்துல் அசீஸ், இனங்களைப் பழிப்போருக்கு எதிராக தேச நிந்தனைச் சட்டத்தைப் பயன்படுத்தலாம் என்றார்.
“விரும்பத்தகாத சம்பவங்கள் நடப்பதைத் தடுக்க தேச நிந்தனைச் சட்டத்தைப் பயன்படுத்தலாம்.
“இந்நாட்டில் ஒரு இனம் சீற்றம் கொள்ளும் வகையில் பேசுவது தேச நிந்தனைச் சட்டத்தின்கீழ் குற்றமாகும்”, என்று நஸ்ரி இன்று நாடாளுமன்றத்தில் கூறினார்.
ஆனால், அச்சட்டத்தை விமர்சிப்பவர்கள், அது மாற்றுக்கருத்துக் கொண்டோரை ஒடுக்குவதற்குப் பயன்படும் ஒரு கொடூரச் சட்டம் என்று குறை கூறுகிறார்கள்.
எந்த அம்னோ இனவாதத்தினருக்கு எதிராக இதுவரை தேசநிந்தனை சட்டத்தைப் பயன்படுத்திருக்கிறீர்கள்?